மதுக்கடை மூடுவது குறித்து கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம் விரைவில் பட்டியல்-அமைச்சர் முத்துசாமி.
ஈரோட்டில் சூரம்பட்டி அணைக்கட்டு ஆகாயத்தாமரை அகற்றும் பணியை மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது:திருமாவளவன் மதுக்கடைகள் மூட வேண்டும் என்ற கொள்கையில் திமுகவுக்கு மாறுப்பட்ட கருத்து இல்லை படிப்படியாக மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ஆனால் மது விற்பனை அதிகரித்து வருவதாக தமிழக அரசு மீது தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன நடைமுறையில் ஒரே நாளில் மூடினால் பிரச்சினை ஏற்படும்.
கடை மூடிய பிறகு அருகில் உள்ள கடைக்கு மது குடிப்பவர்கள் செல்வதால் விற்பனை அதிகமாக உள்ளது துறை ரீதியாக விழிப்புணர்வு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.படிப்படியாக தமிழகத்தில் மதுக்கடைகள் குறைக்கும் எண்ணம் அரசுக்கு உள்ளது கண்டிப்பாக செய்வோம்.
கிராமங்களில் மதுகடைகளில் வேண்டாம் என கிராம மக்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
தொல் திருமாவளவன் அகில இந்திய அளவில் மதுக்கடைகளை மூடுவதற்கு முன் வந்தால் மாநில அரசு தாயாராக உள்ளது.அதற்கு முன்பு முதல்வர் மதுக்கடைகள் மூடுவது குறித்து கணக்கு கேட்டு வந்துள்ளார்.
கடை மூடுவது குறித்து கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம் விரைவில் பட்டியல் தெரியப்படுத்துவோம்.
பள்ளியில் மது குடிப்பது தவறான பழக்கம் குறித்து விழிப்புணர்வு செய்து வருகிறோம்.வீட்டு மனைகள் வரைமுறை படுத்த போதுமான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது அதனால் கால அவகாசம் வழங்கப்பட்டாது...
சென்னையில் குறைந்த எண்ணிக்கையிலான வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளது இனி வீடுகள் தேவை பொறுத்து தான் வீடுகள் கட்ட கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது.5ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை ஆகாமல் உள்ளது,தரமற்றது விலையுயர்வு போன்ற காரணங்களால் வீடுகள் விற்பனை ஆகாமல் தான் உள்ளது.மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக தேர்வு செய்வது குறித்து திமுக தலைவரும்,முதல்வரும் முடிவு எடுக்க கூடிய ஒன்று எனதெரிவித்தார்.
Tags : மதுக்கடை மூடுவது குறித்து கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம் விரைவில் பட்டியல்-அமைச்சர் முத்துசாமி.