குடிநீரில் E Coli பாக்டீரியா.. ஐஐடி ஆய்வில் தகவல்
சென்னையில் உள்ள 75% வீடுகளில் உள்ள நீர், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை உண்டாக்கும் பாக்டீரியாவான ஈ கோலியால் மாசுபட்டுள்ளதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், வாட்டர் பில்டர் பயன்படுத்தும் குடும்பங்களும் அடங்கும். தண்ணீர் குழாய்கள், அசுத்தமான தொட்டிகள் அல்லது தண்ணீர் கொள்கலன்கள் பாக்டீரியாவின் ஆதாரமாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. ஈ கோலை பாக்டீரியா, மலம் மாசுபடுவதன் மூலம் உணவு மற்றும் தண்ணீருக்குள் செல்வது தெரியவந்துள்ளது.
Tags :