சென்னையில் 600 மின்சாரம் பேருந்துகள் இயக்க உள்ளதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் மின்சார பேருந்துகளுக்கு மக்களிடம் அதிகம் வரவேற்பு இருப்பதின் காரணமாக கூடுதலாக 600 மின்சாரம் பேருந்துகள் இயக்க உள்ளதாக காலநிலை மாற்ற கூட்டத்தின் பொழுது தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இதை தெரிவித்தார்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தனது இரண்டாம் கட்ட மின்சார பேருந்து திட்டத்தின் கீழ் 600 புதிய மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான ஒப்பந்தங்களை டிசம்பர் 2025 இல் வழங்கி உள்ளது மொத்தம் 600 தாள்தள மின்சார பேருந்துகள் இதில் 400 ஏசி மற்றும் 200 ஏசி அல்லாத பேருந்துகள் அடங்கும். குளோபல் மொபிலிட்டி நிறுவனம் 400 பேருந்துகளையும் டிராவல் டைம் மொபிலிட்டி நிறுவனம் 200 பேருந்துகளையும் இயக்க உள்ளது. இந்த தனியார் நிறுவனம் பேருந்துகளை இயக்கி பராமரிக்கும். அரசு அவர்களுக்கு கிலோமீட்டர் அடிப்படையிலான கட்டணத்தை செலுத்தும். இந்த பேருந்துகளுக்காக ஆலந்தூர், மத்திய பணிமனை 2 ,ஆவடி ,பாடியநல்லூர் ,பெரம்பூர், ஐயப்பன் தாங்கல் உள்ளிட்ட ஆறு பணி மலைகள் மின்சாரப் பேருந்து நிலையங்களாக செயல்படும். 2026 அக்டோபருக்குள் முழுமையாக இந்த பேருந்துகள் செயல்பாட்டிற்கு வரும். ஏற்கனவே, சென்னையில் ஜூன் 2025-ல் 120 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















