ஈரோட்டில், நாளை தமிழக வெற்றி கழகத்தின் கூட்டம் த.வெ. க.தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.

by Admin / 17-12-2025 03:57:52pm
ஈரோட்டில், நாளை தமிழக வெற்றி கழகத்தின் கூட்டம் த.வெ. க.தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.

ஈரோட்டில், நாளை தமிழக வெற்றி கழகத்தின் கூட்டம் த.வெ. க.தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தொண்டர்கள் வருவதற்கும் வெளியேறுவதற்கான பத்துக்கு மேற்பட்ட வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொண்டர்கள்  தாகம் தணிப்பதற்காக பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி  தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் தனித்தனியாக தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட உள்ளன என்றும் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நாளை விஜய் கோவை விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து காரில் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வருவார் என்றும் சாலை மார்க்கமாக வரலாம் என்றும் இரு தரப்பு கருத்துக்கள் நிலவுகின்றன. கரூர் கூட்ட நெரிசலுக்கு பின்பு கூட்டம் நடத்துவதை மிக கவனத்தோடு தமிழக வெற்றி கழகத்தினர் செய்து வருகின்றனர். பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் கூட்டத்திற்கு வராமல் தொலைக்காட்சி வழியாக நிகழ்ச்சியை  பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். கூட்டம் நிகழ உள்ள பகுதிகளில் அங்காங்கே புதிய கடைகள் முளைத்து கொண்டிருக்கிறன. குறிப்பாக, விஜய் படம் அச்சிடப்பட்ட பனியன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 

Tags :

Share via

More stories

Logo