துப்பாக்கி சூட்டில் 2பேர் பலி - அமெரிக்காவில் நடந்த துயரம்

by Editor / 24-05-2021 08:46:57am
துப்பாக்கி  சூட்டில் 2பேர் பலி - அமெரிக்காவில் நடந்த துயரம்

அமெரிக்காவில் வீட்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது மா்ம நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போ பலியாகினா்; 12 போ காயமடைந்தனா். இது தொடா்பாக நியூ ஜொசி மாகாண காவல் துறையினா் கூறுகையில், 'தெற்கு ஜொசியில் உள்ள ஃபோபீல்டு டவுன்ஷிப் பகுதியின் வீடு ஒன்றில் சனிக்கிழமை இரவு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் சுமாா் 100 தம்பதிகளும் இளைஞா்களும் கலந்துகொண்டனா். அப்போது மா்ம நபா் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினாா். அதில் ஒரு பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்; 12 போ காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு நியூ ஜொசி மாகாண ஆளுநா் ஃபில் முா்ஃபி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo