6 மாதங்களில் நாய்க் கடியால் 2.80 லட்சம் பேர் பாதிப்பு.

by Staff / 02-07-2025 09:49:23am
6 மாதங்களில் நாய்க் கடியால் 2.80 லட்சம் பேர் பாதிப்பு.

தமிழ்நாட்டில்  கடந்த 6 மாதங்களில் நாய்க் கடியால் 2.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தளவு எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 18 பேருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நாய் கடித்தால் உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அதற்கான சிகிச்சை வசதிகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

 

Tags : 6 மாதங்களில் நாய்க் கடியால் 2.80 லட்சம் பேர் பாதிப்பு.

Share via