காவல் துறையின் முரட்டுத்தனமான போக்கு சிபிஐ விசாரணை வரவேற்கத்தக்கது: திருமாவளவன்.

by Staff / 02-07-2025 09:37:32am
காவல் துறையின் முரட்டுத்தனமான போக்கு சிபிஐ விசாரணை வரவேற்கத்தக்கது: திருமாவளவன்.

 

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தில் கோயில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார். சாமி கும்பிட வந்த நிக்கிதா என்ற பெண்ணின் காரில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனது தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர், காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு பரிதாபமாக பலியானார்.அஜித்குமார் கொலை வழக்கில் காவல் துறையைச் சேர்ந்த 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். "காவல் துறையின் முரட்டுத்தனமான போக்கு நீடிப்பது வேதனையளிக்கிறது. அரசு கூடுதல் கவனம் செலுத்தி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

 

Tags : CBI probe into police brutality is welcome: Thirumavalavan

Share via