மேக்கரை நீர்த்தேக்கம் உடைவது போன்று சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ காட்சி.

தென்காசி மாவட்டம் மேக்கரையில் கடந்த 92 ஆம் ஆண்டு ஏற்பட்ட கன மழையின் காரணமாகமேற்கு தொடர்ச்சி மலை பகுதியான மேக்கரையில் இருந்து பல்வேறு பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தது இதன் தொடர்ச்சியாக அதன் பின் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த காலகட்டத்தில் அன்றைய கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அரசு கொறடாவாக இருந்த கா.மு.கதிரவன் முயற்சியின் காரணமாக மேக்கரை கிராமத்தில் அடவிநயினார் கோவில் நீர் தேக்கம் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கப்பட்டது. சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்று வரும் இந்த அடவி நயினார் கோவில் நீர் தேக்கம் பல்வேறு பகுதிகளில் வளம் மிக்க பகுதியாக மாற்றி வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் 132 அடி முழு கொள்ளளவை எட்டி இரண்டு வருடங்களுக்கு பிறகு நிரம்பி வழிய தொடங்கியது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அடவி நயினார் கோவில் நீர் தேக்கம் நிரம்பி மறுகால் விழும் காட்சிகளையும் சேர்த்து அந்த நீர்த்தேக்கம் உடைந்து வெள்ளம் பீறிட்டு போவது போன்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உடனடியாக இதுபோன்ற காட்சிகளை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை வலுத்துள்ளது. முல்லை பெரியார் நீர்த்தேக்கம் உடைவது போன்று கேரளாவில் அந்த மாநிலத்தில் சில சமூக வலைதளங்கள் பதிவிட்டு வரும் நிலையில் அதே போன்று தமிழகத்திலும் சொந்த மாவட்டத்தில் உள்ள நீர் தேக்கம் உடைவது போன்று பதிவிடும் செயல் கண்டனத்திற்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags : A video of the Mekkarai reservoir bursting is going viral on social media.