கணவன் கண்டித்ததால் குழந்தைகளைக் கொன்று மனைவி தற்கொலை

by Staff / 04-03-2024 12:32:12pm
கணவன் கண்டித்ததால் குழந்தைகளைக் கொன்று மனைவி தற்கொலை

செல்போனில் பேசிய கொண்டிருந்ததை கண்டித்ததால் 2 குழந்தைகளை கொன்று விட்டு சென்னையை சேர்ந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் கோபிநாத் (32), பெண்ணரசி (29) தம்பதி 2 குழந்தைகளுடன் வசித்துவந்துள்ளனர். பெண்ணரசி அதிக நேரம் செல்போன் பேசியதை கணவர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பெண்ணரசி, மகன் மற்றும் மகளை துணியால் தூக்கு மாட்டி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டடுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறேன் 
 

 

Tags :

Share via