கொட நாடு கொலை கொள்ளை விவகாரம் சசிகலாவிடம் விசாரணை

கொட நாடு கொலை கொள்ளை விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் இன்று விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வசித்துவரும் டி.நகர் இல்லத்தில் ஐ.ஜி சுதாகரன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை தொடங்கி நடந்துவருகின்றது.
சசிகலாவிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் தி நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே கொட நாடு கொலை,கொள்ளை வழக்கில் 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில், இன்று சசிகலாவிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி என்பதால் , கோட நாடு பங்களாவில் இருந்த நில பத்திரங்கள், உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு மண்டல காவல்துறை ஐஜி சுதாகர் தலைமையில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், காவல்துறை ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சந்திரசேகரன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :