மழையையும் பொருட்படுத்தாமல் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

by Admin / 21-08-2024 10:11:15am
மழையையும் பொருட்படுத்தாமல் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மழையையும் பொருட்படுத்தாமல் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இன்று மாலை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள்  கழக மாவட்ட தலைவர் ஆனந்தராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி ஆசிரியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வு திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தியும். உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா வழங்கிய ஊக்க ஊதிய உயர்வினை மீண்டும் வழங்க வலியுறுத்தியும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு, கட்டணம் இல்லா சிகிச்சை வழங்க வலியுறுத்தியும். 2004 -2006 ஆண்டில் பணியேற்ற ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய வலியுறுத்தியும். அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை நாட்களாக அறிவித்து ஆண்டுக்கு 210 பணி வேலை நாட்களாக அறிவிக்க வலியுறுத்தியும். உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். இவ் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட சட்டச் செயலாளர் பூபாண்டி, தலைமையிடச் செயலாளர் அன்டோ கர்டோசா, மாவட்ட செய்தி தொடர்பாளர் ஈஸ்டர்லி பெர்னாண்டோ, உட்பட ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Tags :

Share via