மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ அ.தி.மு.கவிலிருந்து விலகி தி.மு.கவில் இணைந்தாா்.
அதிமுக முன்னாள் சபாநாயகர் பி. எச். பாண்டியனின் மகனும் ஆலங்குளம் சட்டமன்ற அதிமுக உறுப்பினருமான மனோஜ் பாண்டியன் இன்று அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு. .க ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.. அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளான இவர், அ.தி.மு.க ,பா.ஜ.கவின் கிளை கழகமாக மாறிவிட்டதாக குற்றம் சாட்டி, திராவிடக் கொள்கைகளை காக்கும் தி.மு.கவில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.. அத்துடன், தனது சட்டமன்ற பதவியை இன்று மாலை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்..
Tags :



















