வால்பாறைக்கு ரெட் அலர்ட் அவசர ஆலோசனை கூட்டம்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் அறிவித்துள்ள நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி மற்றும் ஆட்சித்தலைவர் பவன் குமார் கிரியப்பனவர் தலைமையில் காணோளி வாயிலாக அவசர ஆலோசனைக் கூட்டம் வால்பாறை நகராட்சி கூட்ட அரங்கில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் (பொ) விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்றது அப்போது வால்பாறை பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் அனைத்து துறைசார்ந்த அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் ஏதாவது தகவல் கிடைத்தால் துரித நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் அதைத்தொடர்ந்து சார் ஆட்சியர் வால்பாறை கூழாங்கல் ஆறு, வாழைத் தோட்டம் ஆறு, அரசு மருத்துவமனை மற்றும் அரசு கல்லூரியில் உள்ள முகாமையும் ஆய்வு மேற்கொண்டார் இந்நிகழ்வின் போது மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் பவித்ரா, வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அனைத்து துறைசார்ந்த அதிகாரிகளும் உடனிருந்த நிலையில் நேற்று இரவு முதல் காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக ஓரிரு இடங்களில் மரம் முறிந்து விழுந்ததை அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்த துரித நடவடிக்கை மேற்க்கொண்டனர் மேலும் வால்பாறை அருகே உள்ள அக்கா மலை, கருமலை, ஊசிமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இன்று மதியம் வரையிலும் அதே நிலை தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது
Tags : வால்பாறைக்கு ரெட் அலர்ட் அவசர ஆலோசனை கூட்டம்