கனமழையால் காவல் நிலையம் இடிந்து விழுந்து SI பலி.

காசியாபாத்தில் பெய்த கனமழையால் காவல் நிலையம் இடிந்து விழுந்ததில் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, அங்கூர் விஹார் காவல் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த வீரேந்திர மிஸ்ரா (58) பரிதாபமாக உயிரிழந்தார். வானிலை ஆய்வு மைய தகவலின்படி, அப்பகுதியில் நேற்றிரவு 8.12 செமீ மழை பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
Tags : கனமழையால் காவல் நிலையம் இடிந்து விழுந்து SI பலி.