கூடலூரில் சுண்ணாம்பு பாலம் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இருவர் மீட்பு.

by Editor / 25-05-2025 10:48:29am
கூடலூரில் சுண்ணாம்பு பாலம் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இருவர் மீட்பு.

நீலகிரி - கூடலூரில் சுண்ணாம்பு பாலம் ஆற்றை கடக்க, கேரள சுற்றுலாப் பயணிகள் முயற்சித்துள்ளனர். அப்போது, வாகனத்தோடு அடித்துச் செல்லப்பட்டதில் இருவர் சிக்கிக்கொண்டனர். சுற்றுலா பயணிகளின் சத்தம் கேட்டு காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு சென்ற மீட்புக் குழுவினர், நீண்ட நேரம் போராடி இருவரையும் மீட்டனர். ஆற்றில் சிக்கியது கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த அருண் தாமஸ், ஆண்டோ என்பது தெரியவந்துள்ளது.

 

Tags : கூடலூரில் சுண்ணாம்பு பாலம் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இருவர் மீட்பு.

Share via