சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

by Editor / 25-05-2025 10:32:54am
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அம்மாபட்டியில்  தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென பயங்கர வெடி விபத்து எற்பட்டது. சுமார் 5 கி.மீ. தொலைவிற்கு சத்தம் கேட்டதை அடுத்தது அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்தில் குவிந்தனர். விபத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். காலை நேரம் என்பதால் யாரும் பணியில் ஈடுபடவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்தவருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமையாளர் யார்? பட்டாசு ஆலைக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

Share via

More stories

Logo