உல்லாசத்துக்கு அழைத்து கேரளாவை சேர்ந்தவரிடம் ரூ.80,000 பணத்தை பறித்த பெண் உள்ளிட்ட 6 பேர் கைது.
கர்நாடகா: அப்துல் சவத் (28) என்பவர் தனது கேரளா நண்பன் சந்தீப் குமாருக்கு (27), அஸ்மா (42) என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில், அஸ்மா சந்தீப் குமாரை தொடர்புகொண்டு உல்லாசமாக இருக்க வரும்படி அழைத்துள்ளார். சந்தீப்குமாரும் ஆசையுடன் குந்தாப்புராவில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அஸ்மா, அப்துல் சவத் உள்பட 6 பேர் சந்தீப்குமாரை கட்டிவைத்து ரூ.80,000 பணத்தை பறித்துவிட்டு விடுவித்துள்ளனர். இதையடுத்து, சந்தீப் புகாரின் பேரில் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
Tags : உல்லாசத்துக்கு அழைத்து கேரளாவை சேர்ந்தவரிடம் ரூ.80,000 பணத்தை பறித்த பெண் உள்ளிட்ட 6 பேர் கைது.



















