சசிகலா  புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

by Admin / 25-02-2026 01:06:35am
 சசிகலா  புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டைமேட்டில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளில் சசிகலா தனது புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதிய கட்சியின் கொடி கருப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களை கொண்ட இந்த கொடியின் நடுவே பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன .கொடியை அறிமுகம் செய்த சசிகலா கட்சியின் பெயரை மட்டும்  அறிவிக்கவில்லை. கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு தீவிர அரசியலில் களம் இறங்குவதாக தெரிவித்த அவர் ஏழை எளிய மக்களுக்கான கட்சியாக இது இருக்கும் என்றும் துரோகிகளையும் எதிரிகளையும்  வேரறுப்போம் என்றும் தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் சசிகலாவின் இந்த புதிய கட்சி அறிவிப்பு அரசியலில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை காலம் புலப்படுத்தும்.

 சசிகலா  புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
 

Tags :

Share via

More stories

Logo