இன்று பிரதமர் நரேந்திர மோடிஇஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகுவின் அழைப்பை ஏற்று பிப்ரவரி 25 மற்றும் 26 தேதிகளில் இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும் குறிப்பாக இஸ்ரேலில் அயன் டோோம் போன்ற தொழில்நுட்பங்களை இந்தியாவின் சுதர்சன சக்கரா வான் பாதுகாப்பு அமைப்பில் இணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படலாம். பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றும் அதிபர் ஐசக் ஹெர்சோக்கையும் சந்திப்பார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ,புத்தாக்கம் ,வேளாண்மை மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட உள்ளது. 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
Tags :


















