உதட்டில் கடித்த பாம்பு.. இளைஞர் பலி

சமீபத்தில் பீகாரில் உள்ள சிவன் பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்திரஜித் என்ற நபர் பாம்பை பிடித்து பொதுமக்கள் முன்னிலையில் சாகசம் செய்தார். வெகுநேரம் ஆர்வத்துடன் பாம்புடன் விளையாடினார். பாம்பை தனது வாயில் பலமுறை நுழைத்து விளையாட்டு காட்டினார். இவ்வாறு செய்து கொண்டிருந்த போது பாம்பு அவரது உதட்டில் கடித்தது. இதனையடுத்து, இந்திரஜித் சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :