மாநிலங்களுக்கு ரூ. 9 ஆயிரம் கோடி  மதிப்பில் பேரிடர் நிவாரண நிதி  மத்திய அரசு வழங்கியது 

by Editor / 30-06-2021 06:35:19pm
மாநிலங்களுக்கு ரூ. 9 ஆயிரம் கோடி  மதிப்பில் பேரிடர் நிவாரண நிதி  மத்திய அரசு வழங்கியது 


பேரிடர் நிவாரண நிதி... கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மாநிலங்களுக்கு சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பேரிடர் நிவாரண நிதியை விடுவித்தது மத்திய அரசு.
கொரோனா கால சிறப்பு நிவாரணமாக, மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. இதனை அடுத்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முதல் தவணையாக 8 ஆயிரத்து 873 கோடி ரூபாயை விடுவித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் 50 சதவீத தொகையான நான்காயிரத்து 436 கோடியை மாநில அரசுகள் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் நிவாரண நிதி என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் வழங்கப்படும் நிலையில், இவ்வாண்டு கொரோனா 2ம் அலையை கருத்தில் கொண்டு முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via