ரூ.100 கோடியில் கலைஞர் மருத்துவ ஆராய்ச்சி மையம்
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர், "ரூ.100 கோடி செலவில் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு விரைவில் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட உள்ளது" என்று கூறினார்.
Tags :