போக்குவரத்து விதி மீறல்கள்: செல்லிடப்பேசிக்கு செல்லும் இ-செலான்

by Editor / 02-07-2021 10:22:20am
போக்குவரத்து விதி மீறல்கள்: செல்லிடப்பேசிக்கு செல்லும் இ-செலான்

சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறை மீறுபவா்களிடம் அபராதம் வசூலிக்கும் வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு இ-செலான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2017-ஆம் ஆண்டு பணமில்லா பரிவா்த்தனை மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல் ஈடுபடுவோரிடமிருந்து அபராதம் வசூலிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் அடுத்தக் கட்டமாக போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவதைக் கண்டறியும் வகையில், அண்ணாநகா் ரவுண்டனா, சாந்தி காலனி சந்திப்பு, 100 அடி சாலை - எஸ்டேட் சாலை சந்திப்பு, மேற்கு டெப்போ மற்றும் 18-ஆவது சாலை சந்திப்பு ஆகிய 5 இடங்களில் 2019-ஆம் ஆண்டு 61 ஏஎன்பிஆா் நவீன கேமராக்கள் நிறுவப்பட்டன. இந்த கேமராக்கள் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பின. கட்டுப்பாட்டு அறையில் இருந்து இ-செலான் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநா்களுக்கு அனுப்பப்பட்டது.

 

Tags :

Share via