திமுக எம்.பி.யின் கட்சிப் பதவி பறிப்பு
திமுக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அக்கட்சியின் எம்.பி., கல்யாணசுந்தரம் நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏ நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் எம்.பி., கல்யாணசுந்தரம், திருமணமாகி 10 மாதங்கள் கழித்தே குழந்தை பிறக்க வேண்டும், உடனே பிறந்தால் வேறு மாதிரி ஆகிவிடும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags :


















