த வெ க வை பலப்படுத்துவதே தன் வேலை-முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
த வெ க வை பலப்படுத்துவதே தன் வேலை என்று த.வெ.ககூட்டத்தில் பங்கேற்ற பின்பு சென்னையில் பேட்டிஅளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். . அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கே. ஏ. செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவி ராஜம்மா செய்துவிட்டு நவம்பர் 2025 இல் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த அவருக்கு அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கோவை, ஈரோடு, திருப்பூர் ,நீலகிரி, மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டன. அதிமுகவில் இருந்து விலகிச் சென்ற தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாள் கெடு விதித்து செங்கோட்டையன் கோரிக்கை விடுத்திருந்தார். கோரிக்கையை தொடர்ந்து அவர் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அதிமுகவை ஒன்றிணைக்கும் எடுத்த முயற்சி பலனளிக்காத நிலையில் அவர் த.வெ.க வில் இணைந்து விட்டதால், தற்பொழுது அந்த கட்சியை மேற்குமண்டலத்தில் பலப்படுத்துவதே தனது முதன்மையான பணி என்று அவர் குறிப்பிட்டு செயல்பட்டு வருகிறார்.. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் டிசம்பர் 16ஆம் தேதி ஈரோட்டில் பரப்புரை நிகழ்த்துவதற்கான பொதுக்கூட்டம் மைதானம் தயாராகி கொண்டிருக்கின்ற சூழலில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
Tags :


















