முதல் சூப்பர் ஸ்டார் பற்றிய திரைப்படத்தை பார்த்திபன் இயக்க உள்ளார்.

தமிழ்த்திரையுலகின் முடிசூடா திரையுலக மன்னர் என்று ரசிகர்களால் பாராட்ட பட்ட முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.டிதியாகராஜ பாகதவர் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் அதற்கான முழுத்திரைக்கதை வடிவத்தையும் தயார் செய்து விட்டதாகவும் இயக்குனரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் தெரிவித்தாக தகவல்.
மூன்றாண்டுகள் தொடர்ந்து ஒடிய பட வரலாற்றை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை என்பது வரலாறு . பாகதவர் வாழ்கையில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஒர் இருட்டு அத்தியாயம். தங்க தட்டில் சாப்பிட்டு ,தங்க டம்ளரில் தண்ணீர் குடித்தவர்
ஆங்கிலேய அரசு வழங்கிய ராவ் பகதூர் பட்டத்தையும் இருநூற்று ஐம்பதுஏக்கர் நிலத்தையும் மறுத்து தேசிய உணர்வை வெளிப்படுத்தியவர்.அவர் வருகைக்காகவே புகைவண்டிய நிறுத்தி,அவர்ஏறிய பின்பே ரயிலை இயக்கிய ஆங்கில அரசு
. கொலைவழக்கில் சிறைத்தண்டனை பெற்று மூன்றாண்டுகளுக்கு பிறகுவெளியே வந்தவர். தொடர்ந்து எடுத்த படங்கள் ஒடாததால்...அவர் திரையுலக வாழ்வு அஸ்தமனமானது
.கண்பார்வை இழந்து கோடிகளில் புரண்ட மா கலைஞன் வாழ்க்கை வெறுமையில் முடிந்தது.அத்தகைய வசீகர குரலுக்கு சொந்தக்காரர் வாழ்கையை படமாக எடுப்பது ஒரு கலைஞன் இன்னொரு கலைஞனுக்கு செய்யும் கைமாறு.

Tags :