புதிய தொழிலாளர் நல கொள்கைகளின் மாற்றங்கள் இன்று முதல் அமல்

by Editor / 01-07-2022 04:52:28pm
 புதிய தொழிலாளர் நல கொள்கைகளின்  மாற்றங்கள் இன்று முதல் அமல்

புதிய தொழிலாளர் நலகொள்கைகளில் மத்திய அரசு செய்துள்ள எண்ணற்ற மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை சட்டமும் அமலுக்கு வந்துள்ளது மூன்று நாட்கள் விடுமுறை இருந்தாலும் வாரத்தில் 48 மணி நேர வேலை செய்ய வேண்டும் என்ற பழைய நடைமுறை தொடர்கிறது. அதாவது ஊழியர்கள் தினமும் 8 மணி நேரத்திற்குப் அதில் 12 மணி நேர வேலை செய்ய வேண்டும் மேலும் தொழிலாளர்களின் மொத்த ஊதியத்தில் 50% அடிப்படை ஊதியம் ஆக இருக்கவேண்டும் என்றும் புதிய கொள்கையில் கூறப்பட்டுள்ளது அடிப்படை ஊதியத்தில் அடிப்படையில் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுவதால் ஊழியர்களின் கைகளில் கிடைக்கும் மாத ஊதியம் குறைய வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via