கனமழை காரணமாக குற்றால அருவியில் நீர்வரத்து
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. வெயிலின் உக்ரம் காரணமாக பொதுமக்கள் ஏராளமான வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் இருந்து வந்தனர்.இந்த நிலையில் இன்று மாலை திடீரென வானம் கருத்து தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. தென்காசி செங்கோட்டை வடகரை மேக்கரை காசி தர்மம் புளியரை .கட்டளை குடியிருப்பு குற்றாலம் , உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இடியுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணி நேரமாக நீடித்தது மேலும் அவ்வப்போது சூறாவளி காற்றும் சுழற்றி அடித்ததின் காரணமாக மின்சாரம் சுமார் அரை மணி நேரம் செங்கோட்டை பகுதிகளில் தடைப்பட்டது. கொளுத்தி எடுத்த கோடை வெயிலின் தாக்கத்தால் குமுரிய மக்கள் .கோடை மலையின் குளிர்ச்சி காரணமாக நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் கனமழை காரணமாக வறண்டுகிடந்த குற்றாலம் மெயினருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags :