பள்ளி மாணவ மாணவிகளின் திறனை வளர்க்க தொழில்நுட்ப பயிற்சி; ஸ்ரீதர் வேம்பு பேட்டி.

by Editor / 03-04-2023 10:36:00pm
பள்ளி மாணவ மாணவிகளின் திறனை வளர்க்க தொழில்நுட்ப பயிற்சி; ஸ்ரீதர் வேம்பு பேட்டி.

கிராமப்புற இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்க நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மென்பொருள் நிறுவனம் தொடங்க உள்ளதாகவும், தேனி கம்பத்தில் பள்ளி மாணவ மாணவிகளின் திறனை வளர்க்க தொழில்நுட்ப பயிற்சி பள்ளி தொடங்க உள்ளதாகவும் ஜோகோ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பேட்டி.

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஜோகோ மென்பொருள் நிறுவனமானது கடந்த சில வருடங்களுக்கு முன்புகிராமப்புற மறுமலர்ச்சி முயற்சிகள் என்ற ஒரு புதிய முயற்சியின் அடிப்படையில் தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதியில் தனது ஜோகோ மென்பொருள் நிறுவன கிளையை தொடங்கியது.

 சுமார் ஏழு பேருடன் தொடங்கிய இந்த கிளையில் தற்போது 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் சூழலில், கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் நகர்ப்புற இடம்பெயர்வை தடுக்கவும், கிராமப்புற வளர்ச்சி மேம்படுத்தவும் இந்த கிளையானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சூழலில், இந்த நிறுவனத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றுள்ள பயன்கள் குறித்தும், கிராமப்புற மாணவர்களின் திறன்களை மேம்படுத்த இந்த நிறுவன மூலம் தொடங்கப்பட்ட பள்ளி மூலமாக பயன் பெற்ற மாணவர்கள் தற்போது அடைந்துள்ள நிலை குறித்தான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

 இந்த நிகழ்ச்சியில் ஜோகோ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவன ஸ்ரீதர் வேம்பு கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்:-அப்போது, கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு மேற்கொள்ளப்படும் இடம்பெயர்வை தடுக்கவும், கிராமப்புற இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும் இந்த தென்காசியில் மென்பொருள் நிறுவனம் ஒன்று தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருவதாகவும், மேலும் கிராமப்புற பகுதிகளில் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக தொழில் நுட்ப பயிற்சி அளிக்கும் பள்ளிகள் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், இந்த முயற்சியானது பல்வேறு கிராமங்களில் விரிவு படுத்தப்படும் எனவும அவர் தெரிவித்தார். தொடர்ந்து, ஜோகோ நிறுவனத்தின் கிளையானது நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தனது கிளைகளை தொடங்க உள்ளதாகவும், தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஜோகோ நிறுவனத்தின் கலைவாணி பள்ளியை பல்வேறு தொடங்கி கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு திறன் பயிற்சி வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதன் மூலம் நகர்ப்புற இடம்பெயர்வு தடுக்கப்பட்டு கிராமப்புற இளைஞர்கள் திறன்கள் மேம்பட்டு உள்ளூர் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.இது போன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஜோகோ நிறுவனம் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

பள்ளி மாணவ மாணவிகளின் திறனை வளர்க்க தொழில்நுட்ப பயிற்சி; ஸ்ரீதர் வேம்பு பேட்டி.
 

Tags :

Share via