சசிகலா, இளவரசி.. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான 1991-1996 அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 66 கோடியே 65 லட்சத்து 42 ஆயிரத்து 318 ரூபாய் சொத்து சேர்த்ததாகவும், வருமானத்திற்கு அதிகமான வகையில் சொத்து குவிப்பதற்கு ஜெயலலிதாவிற்கு உதவி செய்ததாக அவரது உயிர்தோழியாக இருந்த சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.இந்த வழக்கில் 14.02.2017 ஆம் ஆண்டு சிறைத்தண்டனை பெற்று கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த போது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டி அங்கிருந்த அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த புகாரில் சிறையில் இருந்த போது சொகுசு வாழ்க்கைக்காக லஞ்சம் கொடுத்ததாகவும், சசிகலா சிறையில் இருந்த போது ஷாப்பிங் சென்ற வீடியோவும் அப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விசாரணையை நடத்தாமலும், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமலும் போலீசார் தாமதம் செய்து வருவதால், இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னையை சேர்ந்த கீதா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இதில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார், ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர். பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளராக இருந்த சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர் ஆகிய 4 பேர் மீது விசாரணை நடத்த அரசு அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், ரூ.2 கோடி லஞ்ச வழக்கில் குற்றவாளிகளாக சசிகலா, இளவரசி உள்பட 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 24வது பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மார்ச் 11ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சசிகலா, இளவரசி, கிருஷ்ணகுமார், அனிதா, கஜராஜ மகனுார் ஆகிய ஐந்து பேருக்கும் சம்மனை அனுப்ப பிப்ரவரி 11ம்தேதி நீதிபதி லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்,இதன் தொடர்ச்சியாக நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இன்று காலை சசிகலா, இளவரசி இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு வந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.
Tags : Sasikala, Princess .. Azhar in the Bangalore Special Court