காதலை ஏற்காத 14 வயது சிறுமி கொலை

by Staff / 07-07-2024 12:20:03pm
காதலை ஏற்காத 14 வயது சிறுமி கொலை

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் ராம்பில்லி பகுதியில், காதலை ஏற்க மறுத்ததால் 14 வயது சிறுமி வீடு புகுந்து வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு காதல் தொந்தரவு அளித்த சுரேஷ் (26) மீது போலீசில் புகாரளித்ததை அடுத்து அவர் கைதாகி சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்துள்ளார். நேற்றிரவு சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாததை அறிந்து வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தலைமறைவாக உள்ள சுரேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories