எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடங்களில் 2வது நாளாக சிபிசிஐடி சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக சிபிசிஐடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று 3 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று 9 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நில அபகரிப்பு வழக்கில் அவர் 25 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ளார். நேற்று கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Tags :