சென்னை திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அதிகரிக்கும் நாள் மாற்றம்.
சென்னை - திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயில் தற்பொழுது எட்டு ரயில் பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தொடர்ந்து பயணிகளால் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருவதால் பயணிகளின் தேவையை கருதி ஜனவரி 11 முதல் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இந்த ரயில்களில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும் நாள் ஜனவரி 11 -ல் இருந்து ஜனவரி 15 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
Tags : சென்னை திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அதிகரிக்கும் நாள் மாற்றம்