கேரளா மாநில பேரூந்துக்களில் சப்தமில்லமல் பேசவேண்டும்..மீறினால் கடுமையான நடவடிக்கை

by Editor / 20-02-2022 02:50:30pm
கேரளா மாநில பேரூந்துக்களில் சப்தமில்லமல் பேசவேண்டும்..மீறினால்  கடுமையான நடவடிக்கை

கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) பேருந்துகளில் மொபைல் போன்களில் சத்தமாகப் பேசுவது, மின்னணு உபகரணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஒலி-ஒளி காட்சிகளை சத்தமாகப் பார்ப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

பயணிகள் செல்போனில் சத்தமாகப் பேசுவது, அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, பாடல்கள் அல்லது வீடியோக்களை சத்தமாகப் பார்ப்பது, இதனால் மற்ற பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக பல புகார்கள் வந்துள்ளதாகவும் கேஎஸ்ஆர்டிசி நிர்வாக இயக்குநர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.பயணிகள் இதுகுறித்த சந்தகங்களை எழுப்பினால் பேருந்துகளில் தடை செய்யப்பட்டுள்ள அறிவிப்பு காட்டவேண்டுமெனவும்.. இது தொடர்பாக எழும் புகார்களை பஸ் கண்டக்டர்கள் நிவர்த்தி செய்து, வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பயணிகளை வலியுறுத்த வேண்டும்.என அந்த அறிக்கையில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.கேரளாவில் அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Speak quietly in Kerala state buses. Strict action if violated

Share via