பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 வழங்காதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் .

by Editor / 09-01-2025 04:34:14pm
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 வழங்காதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் .

பொங்கல் பண்டிகை வரும் ஜன.14ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருசில தினங்களே இருப்பதால் மக்கள் அதற்காக தயாராகி வருகின்றனர். இதற்கிடையே, பொங்கலை கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடக்கி வைத்தார். ஆனால் அதனுடன் ரொக்கம் வழங்கவில்லை என்று பலருக்கும் கேள்வி இருந்தது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 வழங்காதது ஏன்? என்பதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் பேசியதாவது:“பொங்கல் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்தது. வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் ரூ.37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ரூ.276 கோடி மட்டுமே கிடைத்தது. SSA திட்டத்தில் ரூ.2,100 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை. இதனால், மாநில அரசின் நிதியைக் கொண்டே அவை ஈடுகட்டப்படுகின்றன. இதனால்தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 வழங்க முடியவில்லை”இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

 

Tags : பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 வழங்காதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் 

Share via