நயினார் நாகேந்திரன் குறுக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்

கடந்த 2024-ல் நடந்த மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் குறுக்கு விசாரணைக்காக நயினார் நாகேந்திரன் இன்று (ஜூலை. 14) நீதிமன்றத்தில் ஆஜரானார். ராபர்ட் தன் மீதான வழக்குகளை மறைத்துள்ளதாகவும் சொத்து விபரங்களை சரியாக குறிப்பிடவில்லை என்றும் மனுவில் நயினார் குறிப்பிட்டிருந்தார்.
Tags :