கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கேரள முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகிற மே 2ஆம் தேதி கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தற்போது இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் கேரளாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.
Tags :