.அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெற வழி வகுக்கும்-பிரதமர் நரேந்திர மோடி
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் தொண்டர்களுக்கு மத்தியில் ஆற்றிய உரையிலிருந்து சில, .
.பீகார் மக்களின் எந்தத் தீர்ப்பு நல்லாட்சி வளர்ச்சி மற்றும் சமூக நீதிக்கான அவர்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்றும் இந்த வெற்றியின் மூலம் பீகாரில் இனி ஒருபோதும் காட்டாட்சி திரும்ப வராது. எதிர்க்கட்சியின் கூட்டணியை மறைமுகமாக விமர்சித்ததோடு ,இந்த மகத்தான வெற்றிக்கு மாநிலத்தின் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் முக்கிய காரணமாக அமைந்ததையும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலை உறுதி செய்த இந்திய தேர்தல் ஆணையத்தையும் அவர் பாராட்டினாா். பீகாரில் கிடைத்த இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி .அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெற வழி வகுக்கும் என்று அவர் தம் நம்பிக்கை புலப்படுத்தினார்..
Tags :


















