கொள்கையின் அரசாக திமுக அரசு இருக்கும்; - முதல்வர்

by Editor / 12-09-2021 12:04:38pm
கொள்கையின் அரசாக திமுக அரசு இருக்கும்; - முதல்வர்

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்,மத்திய பண்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில்,இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் கூறியதாவது,"பல ஆயிரம் சிந்தனைகளை கொண்டவர் பாரதி,அவரது கவிதை மற்றும் பாடல்களை மக்களின் மனதிலிருந்து நீக்க முடியாது, பாரதியின் பாதை புதிய சமூகம் அமைக்கும் பாதை", என்று கூறியுள்ளார்.

மேலும்,முதல்வர் பேசுகையில்,"ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் கொள்கையின் அரசாக திமுக அரசு இருக்கும்,இது எனது அரசு அல்ல நமது அரசு, பாரதியார் இன்றும் தேவைப்படுகிறார், பாரதி காலத்தின் தேவை" என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via