சிலம்பம் சுற்றி அசத்தும் கர்ப்பிணி பெண்

by Editor / 30-09-2021 06:18:40pm
 சிலம்பம் சுற்றி அசத்தும் கர்ப்பிணி பெண்

 

நாமக்கல் அருகே தூசூர் கனவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்த். அவரது மனைவி சினேகா. மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் நேரம்போக காலை மாலை நேரங்களில் மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்கும் பயிற்சிக் கூடமும் 'ஏகலைவா' என்ற பெயரில் நவீன்த் நடத்தி வருகிறார்.


நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தன்னிடம் பயிற்சி பெறும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக சிலம்ப சாதனை நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் நவீன்த் நடத்தினார். இதனை கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற தனியார் அமைப்பு பதிவு செய்தது.


இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினாலும் நவீன்த் மனைவி சினேகா உடலெங்கும் வியர்வை கொட்ட கொட்ட இரு சிலம்பங்களை ஒரு மணி நேரம் இடைவிடாது சுழற்றியதே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
காரணம் சினேகா ஏழு மாத கர்ப்பிணிப்பெண். அவர் இரு கைகளிலும் சிலம்பத்தை பிடித்து ஆவேசமாகவும், அதே சமயத்தில் சிலம்பம் தன் வயிற்றில் பட்டு விடாதவாறும் லாவகமாக சுழற்றினார்.

 

Tags :

Share via