அதிமுக முன்னாள் அமைச்சர் வடிவேல் காலமானார்

by Staff / 28-11-2023 12:31:05pm
அதிமுக முன்னாள் அமைச்சர் வடிவேல் காலமானார்

வாணியம்பாடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வடிவேல் காலமானார். முன்னாள் அமைச்சர் வடிவேல்(86), 2002ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் ஊரக தொழில்துறை அமைச்சர், மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், மாநில விவசாய பிரிவு செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சம்மந்திகுப்பம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய உடலுக்கு திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via