வங்கி கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு- டிஜிபி சைலேந்திரபாபு

சென்னையில் தனியார் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். கொள்ளையை அரங்கேற்றிவிட்டு மோட்டார் வாகனத்தில் தப்பிச்சென்றவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வங்கிக் கொள்ளை கும்பலை பிடிக்க சென்னை அருகே உள்ள மாவட்டங்களில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
Tags :