காட்டு யானை தாக்கி உயிரிழந்த இரண்டு நபர்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளையும் தாக்கி வருகிறது.
காட்டு யானைகள் மற்றும் காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளையும் தாக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அரங்கேறி வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த 2 பேருக்கும், காட்டுமாடு தாக்கி காயமடைந்த ஒருவருக்கும் நிவாரணமானது தென்காசி மாவட்ட அலுவலகத்தில் வைத்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் நிவாரத்தொகையை வழங்கினார்.இந்தநிகழ்வில் தென்காசி எம்.பி.ராணி ஸ்ரீகுமார்,மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி,ரேஞ்சர் சுரேஷ்,உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சொக்கம்பட்டி அருகே உள்ள கலைமான் நகரைச் சேர்ந்த பழங்குடியினரான வேல்துரை என்பவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமும், சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த மூக்கையா என்பவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமும் வழங்கப்பட்ட நிலையில், புளியங்குடியை சேர்ந்த முகைதீன் என்பவருக்கு ரூ.59 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்பட்டது.
Tags : காட்டு யானை தாக்கி உயிரிழந்த இரண்டு நபர்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு.