31 கிலோ கஞ்சா பறிமுதல் இரண்டு பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் இரணியல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் 31.500 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்தனர் மற்றும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மூக்கையா தேவர் என்பவரின் மகன் அன்பழகன்(63), தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த பிச்சையா என்பவரின் மகன் இசக்கி ராஜ் (53), ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது.
மேலும் நேசமணி நகர் காவல் நிலைய த்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முருகன், பேச்சியப்பன்,அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Tags : 31 கிலோ கஞ்சா பறிமுதல் இரண்டு பேர் கைது.