சட்ட விரோத பட்டாசு குடோனில் தீவிபத்து.

விருதுநகர்: சாத்தூர் அருகே முத்தாண்டிபுரத்தில் சட்ட விரோதமாக குடியிருப்பு பகுதியில் செயல்பட்டுவந்த பட்டாசு குடோனில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குடோன் முற்றிலும் எரிந்து சேதமானது. தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறின. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு பலமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : சட்ட விரோத பட்டாசு குடோனில் தீவிபத்து.