மகள் மீது சந்தேகம்.. அடித்தே கொன்ற கொடூர தந்தை
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் அஷ்ரஃப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பால். இவருக்கு 19 வயதில் அன்ஷு என்ற மகள் இருந்தார். அவர் வேறொரு நபருடன் உறவு வைத்திருப்பதாக தந்தைக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மகளை இரும்பு கம்பியால் தந்தை அடித்துக் கொலை செய்தார். தொடர்ந்து, தந்தையும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, அன்ஷுவின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :