மதுரை இளைஞர் உயிரிழப்பு விவகாரம் அண்ணாநகர் காவல் ஆய்வாளர்ஆயுதப்படைக்கு மாற்றம்.

மதுரை யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞரை நேற்று அதிகாலை அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலா மற்றும் தனிப்படை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.இந்நிலையில் தினேஷ்குமார் வண்டியூர் வைகையாற்று கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அண்ணா நகர் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர்.இதனிடையே தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்ட நிலையில் காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலா ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவு.
Tags : மதுரை இளைஞர் உயிரிழப்பு விவகாரம் அண்ணாநகர் காவல் ஆய்வாளர்ஆயுதப்படைக்கு மாற்றம்.