புதிய அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்ற போகிறேன்-காளியம்மாள்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் பேட்டியளித்தார். அப்போது, நயினார் நாகேந்திரன் உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு, மீனவர் பிரச்னைகளுக்காக தலைவர்களை சந்தித்து பேசி வருவதாக காளியம்மாள் கூறினார். மற்ற தேர்தல்களை விட வரும் சட்டமன்றத் தேர்தல் வித்தியாசமான களமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.குறிப்பாக அந்தப் பேட்டியில், “வாக்கு பெற்று தான் வெற்றி எனும் ஜனநாயகம் இங்கு இருப்பதால், நிச்சயமாக ஒரு அரசியல் கட்சியுடன் தான் தேர்தல் நேரப் பயணம் இருக்கும் என்பதை உறுதியாக சொல்கிறேன். அதேபோல், அது எந்தக் கட்சி என்பதையும் தெரிவிப்பேன்” எனத் தெரிவித்தார்.
Tags : புதிய அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்ற போகிறேன்-காளியம்மாள்.