மாணவர்கள் முன் சுருண்டு விழுந்து உயிரிழந்த ஆசிரியை

கேரளாவின் திருச்சூரில் உள்ள கொரட்டி லிட்டில் ஃபிளவர் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு அறிவியல் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பிரியாவிடை நிகழ்ச்சியில் கணித ஆசிரியை ரம்யா ஜோஸ் (41) மாணவர்கள் மத்தியில் பேசி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, அவர் நாற்காலியில் உட்கார முயன்ற போது திடீரென சுருண்டு விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் வழியிலேயே உயிரிழந்தார். கடந்த ஆண்டும் இதேபோன்று அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு நலம் பெற்றார். ஆனால் இம்முறை அவரது உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :