செந்தில் பாலாஜியின் காவல் பிப்.07 வரை நீட்டிப்பு

by Staff / 31-01-2024 03:45:50pm
செந்தில் பாலாஜியின் காவல் பிப்.07 வரை நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 18வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த், பிப்.07 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via

More stories